மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தனுஷின் டி 50 படத்தை பாராட்டிய எஸ். ஜே சூர்யா!" வைரலாகும் ட்வீட்!
ஆரம்ப காலங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து, பின்னாளில் இயக்குனராக உருமாறி அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களை வைத்துப் படம் இயக்கியவர் எஸ். ஜே. சூர்யா. இவர் 1999ம் ஆண்டு அஜித், சிம்ரன் நடித்த "வாலி" திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
தற்போது முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் எஸ். ஜே. சூர்யா, சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளார்,
மேலும் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தனுஷின் 50வது படத்திலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து வரும் இப்படத்திற்கு "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ். ஜே. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் "தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன ஒரு வெறி. என்ன ஒரு டெடிகேஷன், டி 50 ஒரு வித்தியாசமான கதைக்களம். அவரு சூப்பர் டைரக்டரும் கூட. இது ஒரு சர்வதேச வெளியீடு. ஆல் தி பெஸ்ட் டு நீக் டூ" என்று பதிவிட்டுள்ளார்.