மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரலட்சுமியிடம் ஸாரி கேட்ட எஸ். ஜே. சூர்யா... டைம் லூப்பில் மாட்டிக்கிட்டீங்களா சார்.? என ரசிகர்கள் கிண்டல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. இவர் தற்போது முழு நேர நடிகனாகவே மாறிவிட்டார். ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக மட்டுமே மீன் அடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல பரிணாமங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
ஸ்பைடர் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு வில்லனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
காவல்துறை அதிகாரியாக அந்த திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக நடித்திருப்பார் எஸ் ஜே சூர்யா. அந்தத் திரைப்படத்தின் வெற்றி சிம்புவின் திரையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மறுக்க முடியாதது. சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
How I missed this message…sorry & thx a lot 🙏 https://t.co/3FwTUtS5Oo
— S J Suryah (@iam_SJSuryah) May 26, 2023
இந்நிலையில் படம் வந்த 2021 ஆம் ஆண்டு நடிகை வரலட்சுமி சரத்குமார் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பை பாராட்டி ட்விட் செய்திருக்கிறார். அந்த ட்விட்டை எஸ் ஜே சூர்யா மறந்துவிட்டார். சமீபத்தில் அதனை பார்த்த அவர் மிகவும் நன்றி எப்படி நான் பார்க்க தவற விட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என வரலட்சுமி சரத்குமாருக்கு பதில் அளித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன சார் டைம் லூப்பில் மாட்டிக் கொண்டீர்களா.? என கிண்டல் செய்து வருகின்றனர்.