மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் அசத்தல் டீஸர் வீடியோ வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய திரைப்படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக உள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்திருந்த அயலான் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்பைடர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
I'm honored to have portrayed #MajorMukundVaradarajan. Get ready for the journey of courage and valour.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 16, 2024
Here's the title teaser and first-look of #Amaran - https://t.co/5FJ26DwkjL#Ulaganayagan @ikamalhaasan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh… pic.twitter.com/gsIqPs5y04
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.