பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மேக்கப் இல்லாமல் நடிகை ஸ்னேகா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் நடிகை சினேகா.
இந்நிலையில் நடிகை சினேகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் இன்னும் சில காலங்களுக்கு சினிமாவில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. சினேகா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் சினேகா பிரசன்னா தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை சினேகா மேக்கப் இல்லாமல் தனது மகன் மற்றும் செல்லப்பிராணியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்க தேவதை மாதிரிதான் இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர்.