#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பழைய நிலைக்கு திரும்ப 16 மாதங்கள் ஆகிருச்சு.! நடிகை சோனம் கபூர் பகிர்ந்த கலக்கல் கிளிக்ஸ்! வர்ணிக்கும் ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அனில் கபூர். இவரது மகள் சோனம் கபூரும் ஒரு நடிகையாவார். அவர் சவாரியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார்.
சோனம் கபூர் தமிழில் தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஞ்சனா படத்தில் நடித்திருந்தார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு வாயு என்று அழகிய ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து, குழந்தை பெற்ற பிறகு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 16 மாதங்கள் ஆகியுள்ளது. மெதுவாக எந்த பயங்கரமான டயட்டும், கடினமான உடற்பயிற்சி இல்லாமல் என்னையும், குழந்தையும் கவனித்துக்கொண்டு பொறுமையாக எனக்கான நேரத்தை ஒதுக்கினேன். நான் இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை. ஆனாலும் நான் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேனோ ஓரளவிற்கு அந்த நிலையை நெருங்கிவிட்டேன். எனது உடலுக்குதான் நன்றி கூற வேண்டும். பெண்ணாக இருப்பது மிகவும் அற்புதமான விஷயம் என பகிர்ந்துள்ளார்.