#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சீரியலில் செம அம்சமாக களமிறங்கும் நடிகை சோனியா அகர்வால்! அதுவும் எந்த சீரியலில் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தக்க இடத்தை பிடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இத்திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த ஒற்றை படத்திலேயே அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதனைத் தொடர்ந்து சோனியா அகர்வால் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே என பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு
இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2010ஆம் ஆண்டு பிரிந்தனர்.
சொக்கவைக்கும் சோனியா அகர்வால் வந்திருக்காக!
— Sun TV (@SunTV) July 31, 2021
பாண்டவர் இல்லம் | நினைத்தாலே இனிக்கும்
ஆகஸ்ட் 1 | 2 PM#SunTV #PandavarIllam #PandavarIllamOnSunTV #PandavarIllamSpecial #DigitalExclusive @soniya_agg pic.twitter.com/wZxP6E1i21
அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின்னர் சோனியா அகர்வால் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் குயின் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சோனியா அகர்வால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.