#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சோனியா அகர்வாலுக்கு, எஸ்பிபி சரணுடன் இரண்டாவது திருமணமா?? புகைப்படத்துடன் உண்மையை உடைத்த பாடகர்!!
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் 7 ஜி ரெயின்போ காலனி, கோவில், மதுர, புதுப்பேட்டை எனப் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகையாக வலம் வந்தார்.
இந்த நிலையில் அவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எஸ்பிபி சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை புதியது ஒன்று ஆரம்பமாகிறது என பதிவிட்டு இருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக எண்ணி வாழ்த்துக்களைக் கூறி கமெண்ட் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் உள்ளனர். அதில் வெப் சீரிஸ் என்ற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் எனவும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.