#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த பாத்ரூம் சீன்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது! சோனியா அகர்வால் ஓபன்டாக்!!
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். புதுப்பேட்டை, தம், கோவில், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சோனியா அகர்வால் பேசினார்.அப்பொழுது அவரிடம் புதுப்பேட்டை படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன என கேள்வி எழுப்பப்பட்டது..
அதற்கு அவர் பாத்ரூமில் தனுஷிற்கு முதுகு தேய்துவிடும் அந்த குளியலறை காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவரது ரசிகர்கள்,இந்த படத்தில் அருமையான காட்சிகள் எத்தனையோ உள்ளது. இவர் ஏன் அதை சொன்னார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.