மாணவர்களின் பாதுகாப்புதான் முக்கியம்! மத்திய அரசிடம் நடிகர் சோனு சூட் விடுத்த முக்கிய வேண்டுகோள்!



sonu-sood-request-about-neet-and-jeee-exams

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கருதி பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி,  ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. 

இப்போதைய இக்கட்டான  தருணத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில்,  நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு இந்திய அரசிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களின்  பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.