நம்ம பரோட்டா சூரியா இது! சும்மா வேற லெவலில் மிரட்டுறாரே! புகைப்படத்தை கண்டு வாயைப்பிளந்த ரசிகர்கள்!



soori-latest-sixpack-photo-viral

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதனைத்தொடர்ந்து  அவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் திரைப்படங்களில் தனது காமெடியால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி தற்போது முன்னணி காமெடி நடிகராக உள்ளார். 

இந்நிலையில் கொரோனாவால் வீட்டில் முடங்கியிருக்கும் சூரி வருமானம் இன்றி தவித்த பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் கிராமத்து இளைஞனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  தான் சிக்ஸ்பேக் வைத்து ஜிம்பாடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் 
என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் நடிகர் சூரியா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.