மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்தார் நடிகர் சூரி : இராமனிடத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.!
தமிழ் சினிமாவில் "வெண்ணிலா கபடி குழு" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவர் அப்படத்தில் பரோட்டாவை வைத்து காமெடி செய்ததால், பலரும் இவரை "பரோட்டா சூரி" என்றே அழைப்பர்.
இதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பூஜை, சிங்கம் 3, சீமராஜா, விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு விழா கடந்த 3ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. அங்கு நடிகர் சூரி, சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசிய சூரி, "ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரத்தை விட, ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது" என்று பேசினார்.
இதனால் அவருக்கு எதிராக பலரும் பேசத் தொடங்கினர். இதனை தொடர்ந்து, "நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் தொடங்குவேன். கடவுளுக்கு எதிரானவன் நான் கிடையாது என்றும், நான் நடத்தும் ஹோட்டலுக்கு கூட அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்" என்றும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் "நான் சொன்னதை தவறாக எடுத்துக் கொண்ட சிலர், எனது பேச்சை தவறாக புரிந்து கொண்டனர். நான் படிக்காதவன் என்பதால் மட்டுமே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.