"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சூரி கதாநாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் புதிய அப்டேட்!
காமெடி நடிகராக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சூரி. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சிவ கார்த்திகேயன் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோருடன் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படத்திற்குப் பிறகு நடிகர் சிவா கார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுகாளி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை சிவ கார்த்திகேயன் அவரது எஸ் கே ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார். விடுதலைப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனாபெண் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தினை கூலாங்கல் திரைப்படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்திருக்கிறது.