அம்மாடியோவ்.. நடிப்பு, ஹோட்டல் என கலக்கும் நடிகர் சூரியின் சொத்துமதிப்பு எவ்வளவு பார்த்தீங்களா!!



Soori property value detail viral

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நாயகனாக அசத்தி தற்போது முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் சூரி .தனது வித்தியாசமான பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக்குகளால் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அதாவது நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதுபடம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தற்போது அவர் பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக உள்ளார். மேலும் அவர் தற்போதெல்லாம் லட்சத்தில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகர் சூரி ஹீரோவாக மட்டுமின்றி மதுரையில் பல இடங்களில் அம்மன் உணவகம் தொடங்கி பிஸினஸ் மேனாகவும் மாறியுள்ளார்.

Soori

இந்த நிலையில் தற்போது நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிப்பு, ஹோட்டல் என பிஸியாக இருக்கும் சூரியின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.