தமிழ்நாடு என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பூமி; நெகிழ்ச்சியுடன் பி.சுசிலா



southindian famous singer p.susila

என்னை அள்ளி அணைத்து கொண்ட தமிழ்நாட்டு மண்ணில் தான் நான் பிறந்திருக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பழம் பெறும் பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ், சிறீசம்மா ஆகியோருக்கு பிறந்தார். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.

tamilspark

இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சமீபத்தில் கூட அதிகமான பாடல்களை பாடியமைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர் பாடகி பி.சுசீலா. 83 வயதான அவர் இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பேசியபோது “30000, 40000 என்று எண்ணிக்கை சொல்கிறார்கள். எனக்கு சரியான கணக்கு தெரியவில்லை. நான் பாடுவது கடவுள் கொடுத்த வரம்” என்றார். 

tamilspark

தொடர்ந்து, “தமிழ்நாடு என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பூமி. ஆனால் என்னை பொறுத்தவரை இன்றும் என் தமிழ் உச்சரிப்பு சரியானதாக இல்லை என்றே சொல்வேன். தெலுங்கு வாடை அடிக்கிற தமிழ்தான் பேசுகிறேன். மணக்கும் தமிழ் என் வாயிலிருந்து வர வேண்டும். இந்த மண்ணில் பிறந்திருக்க வேண்டும் என நினைத்துப்பார்ப்பேன்.” என்று கூறினார்.