திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செம குஷியாக மேடையில் தனது காதல் மனைவியை அறிமுகம் செய்த பாடகர் எஸ்.பி.பி! கண்கலங்க வைக்கும் அரிய வீடியோ!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் தனது மனைவியை மேடையில் அறிமுகம் செய்து வைத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பாடகர் எஸ்பிபி அவர்கள் பாடகி ஜானகியுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, இடையில் பாடல் நோட்டை கொடுக்க வந்த தனது காதல் மனைவியை பாசத்துடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் அப்பொழுது பாடகி ஜானகி கையில் வைத்திருந்த சிறிய புத்தகத்தை கிண்டல் செய்து ஒரு குழந்தைபோலவே பேசுவார். இந்த வீடியோ தற்போது வைரலாகி எஸ்பிபியின் நினைவுகளை மீட்டு வருகிறது.