மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையராஜாவின் அந்த வீடியோவை காட்டியபோது எஸ்.பி.பி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! டாக்டர் வெளியிட்ட தகவல்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் பலரும் எஸ்.பி.பியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவருடனான நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் எஸ்.பி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இசைஞானி இளையராஜா அவர்கள் “பாலு சீக்கிரமா எழுந்து வா! உனக்காக காத்திருக்கிறேன்" என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை எஸ்.பி.பியிடம் அவரது மகன் சரண் காண்பித்துள்ளார்.
இறைவா 🙏🙏🙏 pic.twitter.com/SUTJDmE8mp
— Dhanush (@dhanushkraja) August 14, 2020
அந்த வீடியோவைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி, போனை வாங்கி மீண்டும் அந்த வீடியோவை போட சொல்லி இளையராஜாவிற்கு முத்தம் கொடுத்தாராம். இந்த நெகிழ்ச்சி தகவலை மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எஸ் பி.பியும் இளையராஜா அவர்களும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்தனர். மேலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.