மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயலான் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி? உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய திரைப்படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக உள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கருணாகரன், ரகுல் பரித் சிங், யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் தெரியவில்லை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அயலான் திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு எந்த திரைப்படங்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்காத நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.