பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த பாஜகவினர்.! பக்கத்தில் இருப்பது யாருடைய சிலை பார்த்தீங்களா!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இந்த தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு, வசனங்கள் மக்கள் மத்தியில் நன்கு ரீச்சானது. நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்து கடந்த மாதம் 8ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அருகே பாஜக தொண்டர்கள் சிலை திறந்து நெகிழ வைத்துள்ளனர். மேலும் மறைந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி அவர்களுக்கும் சிலை வடித்துள்ளனர். நடிகர் மாரிமுத்து நிற்பது போலவும், ஹீரா பென் மோடி அவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பது போலவும் சிலை உருவாக்கப்பட்டுள்ளது