மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் லாரன்ஸின் துர்காவை இயக்கும் பிரபல இரட்டையர்கள்! அடேங்கப்பா.. யார் தெரியுமா? வெளிவந்த அறிவிப்பு!!
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டு மாபெரும் பிரபலமாக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய, நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகர் லாரன்ஸ் கைவசம் தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து அவர் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் துர்கா என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் லாரன்ஸ் துர்கா படத்தைப்பற்றிய அறிவிப்பு ஒன்றை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
I’m so happy and proud to introduce our Renowned stunt masters @anbariv as directors of #Durga movie under #RagavendraProduction !
— Raghava Lawrence (@offl_Lawrence) January 5, 2022
It’s going to be a power-packed film 🔥
Need all your blessings 🙏🏼#DirectorsOfDurga #Anbariv pic.twitter.com/gDSqp7K5gs
அதில் அவர், பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் துர்கா படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இரட்டையர்களான அன்பு, அறிவு இருவரும் மெட்ராஸ், கபாலி, KGF, கைதி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்து பிரபலமானவர்கள். மேலும் தற்போது பீஸ்ட் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.