மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் கூடுவிட்டு கூடுபாய்வதோ.. விஜய் டிவி சீரியலின் பிரபல நடிகை சன் டிவிக்கு சென்றுவிட்டாரா?.. காரணம் என்ன?..! குழப்பத்தில் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானசா. இவர் அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா தனது பிரசவத்திற்காக தொடரில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், நடிகை ஆல்யா மீண்டும் சீரியலில் நடிக்க வருவதாக சில வாரங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் அந்த சீரியல் சன் டிவியில் வரப்போகிறது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையா? என தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து அறிந்த விஜய் டிவி நெடுந்தொடரில் நடித்து வந்த ஆலியா திடீரென சன் டிவிக்கு சென்றது ஏன்? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.