#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! என்ன விஷயம் தெரியுமா?
தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து நடித்துவருகிறார் விஜய். தெறி, மெர்சல் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதையும் மெர்சல் படம் விஜய்க்கு பெற்றுத்தந்தது.
மூன்றாவதாக தளபதி 63 படத்தில் மீண்டும் இணைந்துள்ளது இந்த கூட்டணி. படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக கொண்ட படமாக உருவாகிவருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார்.
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
.@SunTV buys the satellite rights of #Thalapathy63#Thalapathy63WithSunTV
— Sun TV (@SunTV) March 19, 2019