மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய தொழில் தொடங்கிய சன்னி லியோன்.! ரூ.1000 இருந்தால் போதும்.. அசத்தல் ஆபர்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஆபாச படங்களில் கவர்ச்சியாக நடித்து உலகளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் மதுரராஜா, ஓ மை கோஸ்ட், தீ இவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை சன்னி லியோன் கடந்த 2011-ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சன்னி லியோன் சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதில் தவறியதில்லை. இந்நிலையில் தற்போது ஏராளமான படங்களை கைவசம் கொண்டு பிசியாக இருக்கும் சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதாவது அவர் Chica Loca என்கிற பெயரில் ரெஸ்டாரன்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அங்கு அனைத்து வகையான வெரைட்டி உணவுகளும் கிடைக்கும். மேலும் இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 1000 ரூபாய் செலுத்தினால் அனைத்து விதமான உணவுகளையும் அன்லிமிடெட் ஆக சாப்பிடலாம் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.