#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கைதுக்கு பயந்து தலைமறைவாகிய கண்ணான கண்ணே சீரியல் நடிகர்!" காதல் மனைவி பரபரப்பு புகார்!
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் ராகுல் ரவி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "நந்தினி" தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அதே சேனலில் ஒளிபரப்பான "கண்ணான கண்ணே" தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும், அன்பே வா உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வந்த ராகுல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான "பகவந்த் கேசரி" படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராகுல் ரவி, 2020ம் ஆண்டு, லட்சுமி நாயர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஆரம்பத்தில் இருவரும் ரீல்ஸ் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தனர்.
இந்நிலையில் அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ராகுலின் மீது அவர் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் கைதுக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகி விட்டதாகவும், போலீசார் அவரைத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.