திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்... சூப்பர் தகவலாச்சே... சினிமாவில் நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி... என்ன படம் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர். செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர்களது குரலில் வெளியான சின்ன மச்சான் மற்றும் புஷ்பா படத்தில் அய்யாசாமி பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் இன்று வரை பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் தற்போது ராஜலட்சுமி பாடல்களை தாண்டி சினிமாவில் நடித்துள்ளார். இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் ராதா ரவியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு வீரமான கதை களத்தை கொண்டதாக கூறப்படுகிறது.