மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. சூப்பர் சிங்கர் பிரகதி அம்மாவா இது! குட்டை உடையில் மகளுடன் போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் வகையிலும், திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என வயதிற்கு ஏற்றாற் போல் நடைபெற்று பல சீசன்கள் முடிவடைந்துள்ளது.
இதில் கலந்துகொண்ட பலரும் தற்போது முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இனிமையான குரலால், பாடல்களால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பிரகதி. மேலும் இவர் அதில் இரண்டாவது இடத்தையும் வென்றார். அதுமட்டுமின்றி சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழால் அவர் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி அவ்வபோது தனது கவர்ச்சி மற்றும் பிகினி புகைப்படங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது அம்மாவுடன் குட்டையான, உடையணிந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்த நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.