பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. சூப்பர் சிங்கர் தேஜுவை ஞாபகம் இருக்கா?? ஆள் அடையாளம் தெரியாம எப்படி இருக்காரு பார்த்தீங்களா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் திறமைகளை இந்த உலகிற்கு வெளிக்காட்டி சினிமாவுலகிற்கு பல பாடகர்களை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
மக்கள் மனதை கொள்ளை கொண்ட இந்த நிகழ்ச்சி சீனியர், ஜுனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பலரையும் கவர்ந்து பிரபலமானவர் தேஜு ஸ்ரீ. தனித்தன்மையுடன் பாடும் இவரை நடுவர்கள் கடவுளின் பரிசு என புகழ்ந்தனர். தேஜு ஸ்ரீ புகழ்பெற்ற மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பியை கவர்ந்த போட்டியாளார் ஆவார். மேலும் அவர் பாடகி சின்னக் குயில் சித்ராவின் செல்லகுழந்தையாக வலம் வந்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத தேஜு ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் தேஜுவா இது! நல்லா வளந்துட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.