மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவா வா... இணையதளத்தில் வைரலான சூப்பர் ஸ்டாரின் இமயமலை புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 40 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்தடுத்த இரண்டு தோல்வி படங்களுக்குப் பிறகு இவரது நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக தியானத்திற்காகவும் மன அமைதிக்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் கடந்த நான்கு வருடங்களாக இமயமலைக்கு செல்லவில்லை.
கொரோனா பரவல் மற்றும் உடல் நிலை காரணமாக இமயமலை பயணங்களை தவிர்த்து வந்த அவர் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இமயமலைக்கு செல்வதற்கு முன்பாக ரிஷிகேசில் அமைந்துள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றார் சூப்பர் ஸ்டார். அந்த ஆசிரமத்தில் சூப்பர் ஸ்டார் தங்கியிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இது ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.