மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவரு வரப் போறாரு... ஜெய்லர் பட ரிலீஸ் பற்றிய புதிய அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நட்சத்திரமாக இருந்து வருபவர் அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியை தொடர்ந்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜெய்லர். இந்த திரைப்படத்தில் அவருடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதால் இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று பட குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி ஜெய்லர் திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என பட குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஒரு செய்தி வலம் வருகிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவிலேயே வெளியாகும் என தமிழ் சினிமா உலகிலிருந்து செய்திகள் வெளி வருகின்றன.