#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் தமிழில் டாப் இயக்குனர் படத்தில் ஒப்பந்தமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆடல் பாடல் கவர்ச்சி இவை மட்டுமில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.
இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் இவரது நடிப்பை பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் பாராட்டியிருந்தனர்.
அதன் பின்னர் விஜய், விக்ரம், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அடுத்தடுத்து ஒப்பந்தமான நடிகை கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில்இருந்தார். தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.அதற்காக அவர் தன்னுடைய உடல் எடையையும் குறைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் ஈஸ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.