மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னணி இயக்குனருடன் ஹீரோவாக இணையும் சூரி.?... வெளியான பரபரப்பு தகவல்.!
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சூரி. தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த இவர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் இயக்கத்தில் கொட்டுகாளி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படங்களைத் தவிர விக்ரம் சுகுமாரன் மற்றும் அமீர் ஆகியோரின் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாகவும் சூரி தெரிவித்து இருந்தார்.
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதனைத் தொடர்ந்து ரன், சண்டக்கோழி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் ஜி, அஞ்சான் போன்ற திரைப்படங்களின் தோல்வியால் ஓரம் கட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் வெற்றி மாறன் தயாரிக்க இருக்கும் அந்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆக்சன் மற்றும் குடும்பப்பாங்கான கதைகள் என இரண்டிலும் ஸ்கோர் செய்தவர் லிங்குசாமி என்பது குறிப்பிடத்தக்கது.