வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அமீரின் அல்லக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்! சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!
தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்றளவும் கூட இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து மிகப்பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் தயாரிப்பின் போது அமீர் பொய் கணக்கு காட்டி பணத்தை திருடியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், சேரன், பாரதிராஜா, கரு பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் அமீர்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும், சிவக்குமார் குடும்பத்தினரான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் அமீர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகள் அடங்கிய போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.