மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி! கண்களை குளமாக்கும் வீடியோவை உருக்கமாக பகிர்ந்த நடிகர் சூர்யா!!
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக, சின்னக் கலைவாணராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தவர் நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகள் சிரிப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கும். மேலும் சமூக நலனில் அக்கறை கொண்டு விளங்கிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார்.
இவரது மரணம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் இறுதியாக அரண்மனை 3, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் ரிலீஸாக உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விவேக் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து “LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” என்ற காமெடி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.
He will live forever in our hearts.. It's an honour to share @actor_vivek sir's last work who made us laugh and also passed on socially responsible n progressive thoughts! pic.twitter.com/vz1VVoDHqP
— Suriya Sivakumar (@Suriya_offl) August 13, 2021
அந்த ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் ப்ரமோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது அதன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விவேக்கின் கடைசி வீடியோவான இதனை பகிர்ந்த நடிகர் சூர்யா, 'அவர் என்றும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார். நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்வது எனக்கு கிடைத்த பெரும் கௌரவம். நம்மை சிரிக்க வைத்ததுடன் சமூகப் பொறுப்புள்ள மற்றும் முற்போக்கான எண்ணங்களையும் நமக்குள் பதிய செய்தவர்' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.