மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசியலில் களமிறங்கும் சூர்யா! கட்சியின் பெயர் என்ன தெரியுமா?
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
என்.ஜி.கே. படத்தில் சூர்யா, எம்.எல்.ஏ வாக நடித்துவருகிறார்.
மேலும் அரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் தற்போது லீக்காகி உள்ளது. அதில் அரசியல் மாநாடு நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது.
மேலும் அதற்காக கட்சி பெயர்களுடன் கூடிய பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யா புகைப்படத்துடன் கூடிய பேனர்களில் காக்கும் முன்னேற்ற கழகம் (KMK ) என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றுள்ளது.