#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீ இன்னும் வாழ்கிறாய்! அவரது அக்கா வெளியிட்ட புகைப்படத்தால் நெகிழ்ச்சியில் கண்கலங்கும் ரசிகர்கள்!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சீரியல் நடிகராக அறிமுகமாகி சினிமாவில் சாதித்த அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர்.
இந்தநிலையில் சுஷாந்த் சிங் மன உளைச்சல் காரணமாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கிட்டு. தற்கொலை செய்து கொண்டார் இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருசில பெஞ்சில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிகர், தீவிர வானியலாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், மனிதாபிமானி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுஷாந்த் சிங்கின் சகோதரி அதில், சுஷாந்த் சிங் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது பெயர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தூய ஆன்மாவின் பலன். நீ கடவுளின் குழந்தை. எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.