ஜாதிவெறி பிரச்சனைகளுக்கு சினிமா தான் காரணம் - எஸ்.வி.சேகர்.!



sv-sekar-speech-about-nanguneri-issue

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தவர் எஸ் வி சேகர். தற்போது இவர் அரசியல் கருத்துகளையும் பேசி வருகிறார். 

அதன்படி இவர் பாஜக ஆதரவாளராக உள்ளார். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எஸ் வி சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

sv sekar

அப்போது பேசிய அவர், "ஜாதிகளை ஒழித்து விட்டோம் என்று கூறிக்கொண்டு பள்ளிக்கு சென்றதும் என்ன ஜாதி என்று தான் கேட்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஒவ்வொருவரின் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டு இருக்கிறோம். அப்போது எந்த ஜாதியும் பார்க்கவில்லை.

ஆனால் தற்போது திடீரென ஜாதிக்கு ஒரு கயிறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சினிமா தான். இதை இயக்குனர் முத்தையா ஆரம்பித்து வைத்தார். தன்னுடைய ஜாதியை உயர்த்தி பேசுவது தப்பில்லை ஆனால் அடுத்த ஜாதியை விட தனது ஜாதி உயர்ந்தது என காட்டக்கூடாது. தன்னுடைய ஜாதிக்காரன் மட்டும் இந்த படத்தை பார்த்தால் போதும் என்று ஜாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் கூறுவார்களா?

sv sekar

ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள் அந்த லாபத்தை ஜாதியை மேம்படுத்த செலவழிப்பார்களா? நாங்குநேரியில் ஜாதிபக்தியால் பள்ளி சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள் அந்த மாணவனுக்கு உதவலாமே.? இது அனைத்து இயக்குனர்களுக்கும் பொருந்தும்." என அவர் கூறியுள்ளார்.