மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களுக்கு அப்போ இரத்தம் கொதிக்கலையா? கோவிலுக்குள் லிப்லாக்! எதிர்த்தவர்களுக்கு ஆவேச பதிலடி கொடுத்த தனுஷ் பட நடிகை!
அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான வெப்சீரிஸ் A Suitable boy . இந்த வெப் சீரிஸில் இஷான் கட்டார், தபு, ராம் கபூர், ராசிகா துகல், தன்யா மனிகதலா, தனேஷ் தஷ்வி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் அந்த தொடரில் கோவிலுக்குள் கடவுளுக்கு முன்னால் செருப்பு அணிந்து சுற்றுவது, காதல் ஜோடி முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.இந்தக்காட்சி இந்து மதத்தை அவமதிப்பாக பலரும் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதற்கு பாஜக கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வெப் சீரிஸ் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து தனுசுடன் ராஞ்சனா உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை சுவரா பாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
If the actual #Kathua gangrape of an 8 year old child inside a temple didn’t make your blood boil and soul shrivel; you have no right to be offended about a fictionalised depiction of a kiss in a temple. #fact #ASuitableBoy #BoycottNetflixIndia
— Swara Bhasker (@ReallySwara) November 25, 2020
அதில் அவர், கத்துவா கிராமத்தில் 8 வயது குழந்தையை கோவிலுக்குள் வைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது. அப்பொழுது உங்களது ரத்தம் கொதிக்கவில்லை. உங்களுக்கு ஒரு படத்துக்காக கோவிலில் முத்தகாட்சியை படமாக்கியதை எதிர்க்க உரிமை இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.