#JustIN: திடீரென மயங்கி விழுந்த நடிகர் டி இராஜேந்தர்; பதறிப்போன நிர்வாகிகள்.!



t-rajendar-feeling-sad

 

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டமே ஸ்தம்பித்துப்போனது. 

தாழ்வான பகுதிகளிலும், கிராமங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி போய் தவிப்பிற்கு உள்ளாகினர். மழை வெள்ளம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லவஞ்சிபுரம் பகுதியில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் விஜய் டி ராஜேந்தர், மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அவர் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோதே, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய நிர்வாகிகள், அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.