மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித்தின் அடுத்த வேட்டை! போட்டிக்காக கோவை செல்லும் தல அஜித்! வெற்றிக்காக காத்திருக்கும் தல ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
சமீபத்தில் தல அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது. தல அஜித் ஏதாவது புது விஷயத்தை கற்றுக்கொண்டு அதற்காக பயிற்சியில் ஈடுபடுவார்.
Latest pic of Thala #Ajith sir.
— Ajith (@ajithFC) 31 July 2019
| #NerKondaPaarvai | pic.twitter.com/EtVvKNiKkI
இந்தநிலையில் தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்தார். இப்போது அதற்கான போட்டியில் கலந்துகொள்ள அஜித் கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அவரது வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் தல அஜித்தின் வருகையை அடுத்து துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.