திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பணத்திற்காக தான் இந்த மாதிரி செய்தேன்" மனம் திறந்த தமன்னாவின் காதலர் விஜய் வர்மா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார் தமன்னா. மேலும் தற்போது இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில், விஜய் வர்மா ஆரம்பத்தில் சினிமாவில் அவர் பட்ட கஷ்டங்களை குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வருத்தப்பட வைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, "ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை. அதனால் 3000 சம்பளத்திற்கு ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சும்மா நிற்பது தான் என் வேலை. அந்த மாதிரி படங்களில் பணத்திற்காக மட்டுமே நடித்தேன்" என்று கூறியிருக்கிறார்.