மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினி வழியில் தமன்னா., செய்த செயல்.! கையெடுத்து கும்பிட்ட காஜல்.. சமந்தா போட்ட கமெண்ட்.! வைரல் பதிவு.!
தமிழ் தெலுங்கு ஹிந்தி சினிமா என இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆனந்த தாண்டவம், அயன், படிக்காதவன் என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரி என்ட்ரி கொடுத்திருக்கிறார் தமன்னா. நிச்சயமாக இந்தப் படம் தமன்னாவிற்கு ஒரு மாஸ் கம்பேக் கொடுக்கும் என தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. அவ்வப்போது தனது திரைப்படங்கள் பற்றிய போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருவார்.
தமன்னா எப்போதுமே ஆன்மீக செயல்களில் அதிக ஈடுபாடு உடையவர். இவர் அடிக்கடி கோவையில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம். ஒவ்வொரு மகா சிவராத்திரியின் போதும் ஈஷா மையத்திற்கு வருகை தந்து சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொள்வார் தமன்னா. தற்போதும் சூட்டிங் இல்லாத நேரங்களில் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷாவில் உள்ள லிங்க பைரவி கோவிலை பற்றிய காணொளி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தமன்னா லிங்க பைரவியை வழிபாடு செய்து கொண்டே அவரது பெருமைகளையும் மகிமைகளையும் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவது போல் அமைந்திருக்கிறது அந்த வீடியோ. இந்த வீடியோவை அவர் பதிவிட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.
மேலும் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ள அவரது தோழி நடிகை சமந்தா பைரவி தேவி என கமெண்ட் செய்துள்ளார். மேலும் அவரது மற்றொரு தோழியான காஜல் அகர்வால் சாமி கும்பிடுவது போல் இரண்டு கைகளையும் வைத்திருக்கும் ஈமோஜியை பின்னூட்டமாக இட்டு இருக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்வில் அமைதி வேண்டி ஆன்மீகத்தின் பக்கம் முழுமையாக சென்று கொண்டிருக்கிறாரா? தமன்னா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.