பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
துபாயின் Golden Visa வாங்கிய முதல் தமிழ் நடிகராக பார்த்தீபன்..!
தமிழ் திரையுலக நடிகர்களில் முதல் நபராக துபாயின் கோல்டன் விசாவை நடிகர் பார்த்தீபன் பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் Golden Visa வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. இந்த Golden Visa என்பது துபாய் நாட்டில் சொந்தமாக தொழில் தொடங்கவும், வாழவும், படிப்பிற்காகவும், வேலை பார்ப்பதற்கும் பேருதவி செய்யும்.
அந்த வகையில், இந்த வருடம் Golden Visa வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர், நடிகர் என்று பல பரிணாமத்தில் நம்மிடையே அறிமுகமான நடிகர் பார்த்தீபனுக்கு Golden Visa வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "Golden Visa இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது.
இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக, அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழ் நடிகர்களில் Golden Visa பெரும் முதல் நடிகர் என்றும் கூறினார்கள். விசாரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக துபாயின் Golden Visa-வை நடிகர் மோகன் லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்வி ராஜ், ஆசிப் அலி உட்பட பலரும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.