மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்த தமிழ்த் திரைபடங்கள்..
இந்திய அளவில் நாள்தோறும் அனைத்து மொழிகளிலும் நிறைய படங்கள் வெளியாகின்றன. அவற்றின் வசூலும் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல திரைப்படங்கள் உலக அளவிலும் வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் உள்ள உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அனைத்தும் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளனர். அந்த வகையில், தற்போது இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் புதிய சாதனைகளை படைத்துள்ளன.
2023ம் ஆண்டு துவக்கத்தில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் 300கோடியும், அஜித்தின் துணிவு 200கோடியும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்-2 400கோடியும், இதையடுத்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் 600கோடியும் வசூலித்து சாதனை புரிந்துள்ளன.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள விஜயின் லியோ 400கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய பட்ஜெட் படமான சித்தா 30கோடி வசூலித்துள்ளது. இந்த வருடம் 10திரைப்படங்கள் 2250கோடி வசூலித்து மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட திரைத்துறையாக தமிழ் திரைத்துறை சாதித்துள்ளது.