மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய சாதனை படைத்த தமிழ் சினிமா; ஒரே ஆண்டில் இத்தனை நாறு படங்கள் ரிலீஸ்.!
தமிழ் சினிமா பல சாதனைகளையும், வீழ்ச்சிகளையும் கண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புது புது படங்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் தமிழக மக்களிடையே தொடர்ந்து அறிமுகமான வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலக வரலாற்றில் நடப்பு ஆண்டு அதிகபட்சமாக 230 படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ஓடிடி தளத்தில் 10 திரைப்படங்கள் என மொத்தமாக 240 திரைப்படங்கள் தற்போது வரை வெளியாகி இருக்கின்றன.
வரும் 29-ஆம் தேதியும் 11 திரைப்படங்கள் திரைக்கு வரும் நிலையில், மொத்தமாக நடப்பாண்டில் மட்டும் வெளியாகியுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை 250 கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படைப்புகளுக்கு பஞ்சமில்லை என்பதைப் போல 250 திரைப்படங்கள் வெளியாகினாலும், அதில் 20 திரைப்படங்கள் கூட நல்ல வசூல் மற்றும் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை.