மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"படம் வெற்றி அடையாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" வீடியோ வெளியிட்ட தமிழ் இயக்குனர்..
தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகி பல வெற்றியடைந்துள்ளன. ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.
ஆனால் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தோல்வியடையும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் பணம் மிகப்பெரும் நஷ்டமடைந்து திரைத்துறையில் இருந்து காணாமல் போகின்றனர்.
இந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'பூ போன்ற காதல்' எனும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர் எல் வி சுரேஷ். இப்படம் வெளியாகி மிகப்பெரும் தோல்வியை அடைந்தது. இதனால் கடன் சுமையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் எல்.வி சுரேஷ்.
இது போன்ற நிலையில், தற்போது எல்வி சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள போவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் " பூ போன்ற காதல் திரைப்படம் வெற்றிபெற செய்யுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.