இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..



Tamil movie selected for best Indians movie

IFFI எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த திரைப்பட விழா இந்த வருடம் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Viduthalai

இந்த வருடம் நடைபெறவுள்ளது 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்த வருடம் இந்த விழாவில் திரையிட மொத்தம் 25 படங்கள் தேர்வாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கார்பி ஆகிய இந்திய மொழிப் படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.

பிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான நாகபர்ணா தலைமையில் 12 ஜூரி உறுப்பினரகள் குழு ஒன்று இந்தப்படங்களை தேர்வு தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் இந்தக் குழு தமிழில் இருந்து மொத்தம் நான்கு திரைப்படங்களை தேர்வு செய்துள்ளனர்.

Viduthalai

அதன்படி, தமிழில் வெற்றிமாறனின் விடுதலை, காதல் என்பது பொதுவுடைமை, மணிரதத்தின் பொன்னியின் செல்வன்-2, பிரவீன் செல்வம் இயக்கிய நன்செய் நிலம் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் கன்னடப்படமான "காந்தாரா" படமும்  திரைப்படவுள்ளது.