திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பரு.. பிராபாஸ்க்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணமா?.. சர்ச்சையை கிளப்பும் ரசிகர்களின் பதிவு..!!
தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பலதடவை வந்துள்ளது. இருவருக்கும் 40 வயதை கடந்துள்ள நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.
இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று சிலர் பேசிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மரணமடைந்த பிரபாஸின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணராஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பிரபாசுடன் நேரில் சென்று அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியாகியது.
மேலும் அவரது மரணம் குறித்து உருக்கமான பதிவையும் அனுஷ்கா பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அனுஷ்கா - பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணராஜ் விரும்பியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பது உறுதி என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் சமூக வலைத்தளத்தில் மீண்டும் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்த உண்மை அவர்கள் இருவரும் பேசினால் மட்டுமே தீரும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.