காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தாமரைப்பாக்கம் எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தற்காலிக அனுமதி! எத்தனை நாட்களுக்கு தெரியுமா?
இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. சில தினங்களுக்கு முன்னால் இயற்கை எய்தினார். மரணம் குறித்தான தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுவது வரை அவரது இசை ஊடகங்கள் மற்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபி நினைவிடத்தில் இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.