#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜனனி ஐயரை காப்பாற்றுவதற்காக மொட்டை அடித்துக்கொள்ளும் தாடி பாலாஜி! இன்று வெளியான அதிர்ச்சி ப்ரோமோ வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் இரண்டாவது சீசன் பல எதிர்ப்பருக்களை மீறி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
உலகநாயகன் கமலகாசன் பிக் பாஸ் தொடரை வழிநடத்தி வருகிறார். இன்னும் சில வாரங்களில் இந்த தொடர் முடிய உள்ளதால் ஒவொரு வாரமும் போட்டியாளர்களின் இருந்து ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்தவாரம் டேனியல் வெளியேற்றப்பட்டார். மீதம் உள்ள எட்டு நபர்களில் இந்த வாரம் வெளியேற்ற காத்திருக்கும் நபர்களில் ஜனனி ஐயரும் ஒருவர்.
இந்நிலையில் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார்.
இதனை கேட்டு ஷாக் ஆன பாலாஜி சில யோசனைகளுக்கு பிறகு ஜனனி மகள் போல் என்பதால் நான் இதை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி மும்தாஜ் உதவியுடன் மொட்டை அடித்துக் கொள்கிறார். வீடியோ கீழே உள்ளது.