மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை! அட.. இவர் சூப்பர்ஹிட் பட நடிகையாச்சே!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இறுதியாக போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருந்த நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் நிலைமை சீரான பிறகு படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் அடுத்ததாக AK61 பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தினையும் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித்தின் 61 படமான இதில் பிரபல பாலிவுட் நடிகையான தபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் தபு 22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். தபுவும் நடிகர் அஜித்தும் இணைந்து ஜோடியாக கடைசியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.