மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கலுக்கு முன்பே வெளியாகிறதா விசுவாசம் படம்? எந்த தேதி தெரியுமா?
இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் விசுவாசம். வீரம், வேதாளம், விவேகம் என ஏற்கனவே இந்த கூட்டணி மூன்று படங்களை எடுத்துள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக விசுவாசம் படத்தை எடுத்துள்ளார்கள். பொதுவாக தல படம் என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். இந்நிலையில் விசுவாசம் படத்தில் தல இரட்டை வேடங்களில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்ற நிலையில் அடுத்தகட்ட வேளைகளில் இறங்கியுள்னர் படக்குழுவினர். வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என செய்திகள் வந்தன.
இந்நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாத என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் படம் பொங்கலுக்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 10 ஆம் தேதியே வெளியாகலாம் என கூறப்படுகிறது.